உனக்காக ......

உனக்காக ......
எழுதி வாசித்த கவிதையும் அல்ல ..
கவி கூறி ரசித்த கவிதையும் அல்ல ...
உன் இருக்கமான நினைவுகளால்
என்னுள் முளைத்த சில வார்த்தைகள் –என்
இதயத்தால் உன் செவிகளுக்கு மட்டும் .....
சிறகுகள் உதிர்ந்தாலும் பறக்க தூண்டும் காதலியாய் ..
கற்பனை செய்த உருவம் அல்ல - கடவுள் கொடுத்த வரமாய்
எனக்குள் உன் வருகை ...
மொழிகள் பல தேடுகிறேன் முரண் படாமல் - என்
காதலை உன்னூல் வைக்க – ஆனால்
உன் முகம் கண்டால் கற்றவை எல்லாம்
பழகாத புதுமைகளாக ...
நான் கூற செவி சாய்த்து பிரம்மன்
படைத்த தேவதை நீயின்றி யாராக கூடும் ...
பாதம் தரை படா குழந்தை முனுமுனுக்கும்
கவிதை உன் குரல் --
மழை கால ரோஜாஇதழின்
பனித்துளி முகபருவாய் உன் புன்னகை .....
இவை அனைத்தும் என் கற்பனையும் அல்ல –
கவிதையும் அல்ல .- ஆழமான
உன் நினைவுகளால் –என்னுள்
கூறாமல் கிடக்கும் சில வரிகள் –
இவை முழுவதும் உன்னுள் வைக்க
இந்த நாள் நமக்கு மட்டுமே ....
என்றும் காதலுடன் உன் கணவன் .....

எழுதியவர் : சாமி .... (26-Feb-13, 8:21 pm)
சேர்த்தது : swamy
Tanglish : unakaaga
பார்வை : 84

மேலே