காதலின் சுவடு
மறத்துப்போன இதயத்தின்
இருட்டுசுவர்களில் உன் பாதச்
சுவடுகள்...
உன் பார்வை
கோடைமழையாய் இறங்கியபோது
என் மனதில்
மண் வாசனையாய்
காதல்!
கடல் கலந்த நீலமாய்
கவிதையில் கலந்த
தமிழாய் என்னுள் நீயும்
உன்னில் நானும்...
களவில் காதல்
செய்து
கனவில் கலந்திருந்து
காதலையே உண்டு
காதலையே சுவாசித்து
காதலாகவே வாழ்ந்தகணங்கள்
மரித்துப்போனது எப்போது?
உறங்க மறுக்கிற விழிகளில்
உறைந்துப்போன காலச்சுவடுகள்...
கிழித்தெறிகிற தேதிகளில்
கேட்கின்ற இசைகளில்
கடந்து போகும் பேருந்துகளில்
உடன் வந்த
உன்னை பார்கிறேன்...
என்னையே ஏமாற்றிகொல்கிறேன்...
மதியநேரத்து செவ்வாயும்
பனிப்பெய்த
மார்கழி மதுரையும்
மௌன சாட்சிகளாய்
காதலித்த நாம்
மட்டும்...?
தியாகம் ஒரு தீர்வுதான்
ஆனால்
நீர்த்துப்போகா நினைவுகளும்
வேதனையும்...?
மனது
கோடைகால ஆற்றங்கரையாய்
காத்திருக்கிறது
வந்துப்போன வசந்தம்
எண்ணி... ... ...
காயங்களே வாழ்க்கையான
மனதிற்கு
மருந்து தான் ஏது...?