மழலை...

இருட்கதவை திறந்துகொண்டு...
இவ்வுலகத்திற்குள் நீ நுழைந்தாய்....!

ஆறு மாதகாலம் ..
உன் தாயின் அரவணைப்பில்..
நீ அரங்கேரினாய்...!!

அதற்குப்பின் ஏற்ப்பட்ட ..
அழகிய மழலைப்பருவம்...!
அம்மழலை பருவதினால்..
ஏற்ப்பட்ட மாறுதல்கள்....!!

மண்ணை மனம் ..
உவந்து உண்ணும்...
உன் மனப்போக்கு...!!

கண்களால் கண்டதை....
கைகளால் காயப்படுத்தும்...
உன் கள்ளத்தனம்....!!

கற்ப காலத்தில் ..
கதறி அழுத....
உன் தாய்க்கு...
உன் தளர் நடையில்..
ஏற்ப்படும் நிம்மதி....!!

சாதி மத வேறுப்பாடுகள்...
இல்லாமல்...
அனைவரின் அரவணைப்பில்..
வளரும் உன் உயிர்....!!

எந்த ஓர் எதிரியும் ...
உன் எதிரில் வந்தால்..
ஓர் எறும்பு போல் மாற்றும்..
உன் எளிமை...!!

மனதில் தோன்றும் கவலைகளை...
மறக்க வைக்கும் உன் மழலைத்தனம்...!

உம மழலைத்தனத்தின் மனம்...
இம்மண் எங்கும் பரவி கிடக்கிறது...!!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (3-Mar-13, 3:23 pm)
சேர்த்தது : suganya raj
Tanglish : mazhalai
பார்வை : 94

மேலே