குழந்தைப் பாடல்..1 (சேவல்)

1)சேவல்
கொக்கரக் கொக்கரச் சேவலே
கொண்டை ஆட்டும் சேவலே
கக்கரப் புக்கரப் பாப்பாவை
கண்டு கூவிக் கூப்பிடு.

வண்ண வண்ண இறகுகள்
வளைந்த வாலுச் சேவலே
சின்னச் சின்னப் பாப்பாவை
சிறகடித்துக் கூப்பிடு.

அசைந்து அசைந்து நடக்கிறாய்
அழகு உள்ள சேவலே.
இசைந்து நீயும் பாப்பாவை
இறகு தந்து கூப்பிடு.

கூரை மேலே ஏறிடு
கூவிக் கூவிப் பாடிடு
சோறு உண்ணப் பாப்பாவை
சொல்லிச் சொல்லிக் கூவிடு

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (10-Mar-13, 4:49 pm)
பார்வை : 153

மேலே