உறவே உயிரே...

உறவின் அருமை
பிரிவில் புரியும்
உறக்கம் தொலைத்து
உள்ளம் மருகும்

உறவின் பிணக்கம்
நினைத்தே வருந்தும்
உனக்கும் உண்டோ இந்த
பிரிவின் பிதற்றல்,,,,,

உறவே உறவே
உன்னைத் தேடும் உன்
பிரிவே மருந்து நம்
உறவை உணர

எழுதியவர் : கன்னியம்மாள் (10-Mar-13, 11:20 pm)
Tanglish : urave uyire
பார்வை : 605

மேலே