குழந்தையின் முகத்தில் இறைவனை காண்போம்

ஆழமான அர்த்தங்கள்
பல பொதிந்த
அற்புதமான கவிதை

இது எல்லோரையும்
ஈர்க்கும் வண்ணம்
சிரிக்கும் மலர்

உண்மையான அழுகைக்கும்
உண்மையான சிரிப்பிற்கும்
உலகில் உள்ள
ஒரே ஒரு
உன்னத உதாரணம்

சின்ன சின்னதாய்
ஆசைகள் பல
உண்டு ஆனால்
பேராசை என்பது
இதனிடம் இல்லவேயில்லை

பிடிவாதம் செய்யும்
வாதம் செய்யாது

ஜாதி மத
பேதம் தெரியாது

ஏழைக்கும் பணக்காரனுக்கும்
உள்ள வித்தியாசம்
தெரியாது

அழத்தெரியும் யாரையும்
அழவைக்கத் தெரியாது.

தத்தி தத்தி
நடைகையிலே விழும்
ஆனால் யாரையும்
காலை வாரி
விழவைக்க தெரியாது..

இதனை புரிந்து
கொள்ள மொழிகளின்
அவசியம் இல்லை
அன்பான நெஞ்சம்
இருந்தால் போதும்

உளறல் மொழியிலேயே
உலகத்தை கற்ப்பிக்கும்
அழகிய குட்டி
வாத்தியார் குழந்தை

குழந்தையின் முகத்தில்
இறைவனை காண்போம்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (11-Mar-13, 3:09 pm)
பார்வை : 107

மேலே