இனிமை நிலையாய் வாழியவே
நீலக் கடலில் தனியே ஒருபடகு
பகற் பொழுதில் பளிங்காய் !
செந்நிற மேனியுடன் உறங்கிடும்
பொன்னிற மண்ணில் ஒருவன் !
அலைகள் இல்லாத கடலினிலே
அசைந்து செல்லும் படகோ அழகு !
சந்தடியே இல்லாத மணற் பரப்பில்
சயனிக்கும் மனிதனும் அழகு !
எல்லை தெரியா அமைதிக் கடலில்
வெள்ளை நிறத்தில் பாய்மரப் படகு !
கண்ணில் தெரியும் கடற்கரை ஓரம்
மண்ணின் மடியில் மனிதன் !
கண்டிடும் காட்சியும் நமை கவர்கிறது
கவிதையும் நெஞ்சில் தோன்றியது !
தனிமை எவருக்கும் தனி இன்பமே
இனிமை நிலையாய் வாழியவே !
பழனி குமார்