வெற்றி உன் வசம்

விடிந்ததை நினைத்து
மகிழ்கின்ற எத்தனை
மனிதர்கள் இந்த
உலகில் உள்ளார்களோ...!
தெரியாது.
ஏன்....? விடிந்தது
என்று வருந்துகின்ற
சிலரில் நானும் ஒருவன்.
விடிந்தது என்று
மகிழ்ந்தும் விடாதே...
இரவு வந்தால்
வருந்தியும் விடாதே...
இன்று இந்த இரவு
வராமலும் போகலாம்
நாளை அந்த விடியல்
இல்லாமலும் போகலாம்
இன்று எனபதை மறந்துவிடு
நாளை என்பதை மறுத்துவிடு
இந்த நொடிகள் மட்டுமே
உன்னுடையது என்று
முயற்சி எடு
வெற்றி உன் வசம்