காதல்!
காதல்!
இரு கரு விழிகள்
கரு கொண்டு
இதயம் சுமக்கும்
உயிரில்லா உயிர்!
அண்டை மாநிலம்
அணை கட்டி தடுக்க
உறவு நீருக்கு ஏங்கும்
உதிரம் இல்லா உயிர்!
ஆணிவேர் அறுந்து போனதை
உணரா உச்சந்தலை பூ காய்
தென்றல் தொட்டு விளையாடும்
சிறு குழந்தை!
காலமென்னும் பள்ளம் ஓடும்
காட்டாறு - இஃது
காற்றடிக்கும் திசையோடும்
நீரில்லா வெண்மேகம்!
கரு விழிகளின்
ஒளி ஊஞ்சலில்
துடிக்கும் இதயம், சுமக்கும்
துடிப்பில்லா துயரம்!
ஓட்டை ஓடம் ஓடும்மா
ஓரிடம் விட்டு வேறிடம்
ஆரம்பத்தில் வளர் பிறை
இறுதியில் அம்மாவாசை பலருக்கு!
நன்றி
வாழ்க வளமுடன்
ராசி.