அல்லாஹு ஒருவனுக்கே

அல்லாஹு ஒருவனுக்கே !

நாம் அஞ்சுவதும் அடிபணிவதும்
அல்லாஹு ஒருவனுக்கே !

நாம் கெஞ்சுவதும் உதவி கேட்பதும்
வல்லோன் அவனிடத்தே !

அவன் கொடுக்க நினைத்தால்
யாராலும் தடுக்க முடியாது

அவன் தடுத்து விட்டதை - உலகில்
யாராலும் கொடுக்க முடியாது

ரிஸ்கை தருபவன் அவனே - இன்னும்
எங்கும் கிடைக்கும் நாம் அறியோம்

பிறப்பை தந்ததும் அவனே - நாம்
இறக்கும் நாளையும் அறிவான்

வணக்கங்கள் எல்லாம் அவனுக்கே
வணங்கிடுவோம் அவன் துணை நமக்கு

=ஸ்ரீவை.காதர் =

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (22-Mar-13, 7:39 pm)
பார்வை : 108

மேலே