எழுந்திடு! எதிர்த்திடு! எரித்திடு! (ஹுஜ்ஜா)

முடியாது என
முடங்கிக்கிடக்காதீர்கள்!
மூளை தானே
மூலதனம் மறக்காதீர்கள்!
மூடநம்பிக்கைக்கு
முற்றுப்புள்ளியிட்டு விடுங்கள்!
முயற்சியை
மூச்சாக்கி முன்னேறுங்கள்!

துயரத்தை தூரத்
துரத்திடுங்கள்!
துணிச்சல் விதையை
துணிந்து தூவிடுங்கள்!
துடிப்பை
தூண்டுகோலாய் கொண்டு
துவண்டுபோதலை
தூக்கி எறிந்திடுங்கள்!

இயலாமையை
இல்லாமையாக்கிடுங்கள்!
இருப்பதை
இதயம்கனிந்து ஏற்றிடுங்கள்!
இயற்கையோடு இசைந்து
இணைந்திடுங்கள்!
இன்பத்தை
இறுக்கப் பற்றிடுங்கள்!

எதிரியை அறிவால்
எதிர்கொள்ளுங்கள்!
எரிமலையும் பெரிதல்ல
எரித்திடுங்கள்!
ஏமாற்றுவோரை
ஏறிட்டுப்பாராதீர்கள்!
எண்ணங்களில்
ஏற்றம் கண்டிடுங்கள்!

எழுதியவர் : hujja (25-Mar-13, 7:45 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 184

மேலே