நீயின்றி தவிக்கின்றேன்

என் நிழல் கூட
நிலையின்றி தவிக்குதடி
நீயின்றி
என் குரல் கூட
ஒலியின்றி மறுக்குதடி
நீயின்றி
என் விரல் கூட
செயலின்றி வாடுதடி
நீயின்றி
என் விழி கூட
இமைமூடி நோகுதடி
நீயின்றி
என் நாசி கூட
சுவாசிக்க மறுக்குதடி
நீயின்றி
என் தொண்டை குழி
உணவு செல்ல மறுக்குதடி
நீயின்றி
என் கை கூட
வேலைசெய்ய மறுக்குதடி
நீயின்றி
என் கால் கூட
நடக்க மறுக்குதடி
நீயின்றி
என் மனம் கூட
மயங்கி நோகுதடி
நீயின்றி
நீயின்றி தவிக்கின்றேன்
நீரற்ற தாமரை போல் வாடுகிறேன்
வெண்ணிலவே
இப்படிக்கு
அருண்