இனிமை! இனிமை!
தெற்கிருந்து வீசும் தென்றல் காற்றில்
தெளிவின்றி அசையும் தென்னங்கீற்றில்
எங்கிருந்தோ கேட்கும் தெம்மாங்கு பாட்டில்
இருக்குமடா! இருக்குமடா! இனிமை! இனிமை!
உச்சிமலை மேலிருந்து கொட்டுகின்ற அருவி!
அதனருகே அன்பையூட்டும் வேம்புமரக் குருவி!
வயற்காட்டில் ஓடுகின்ற விவசாயத்து கருவி!
சொல்லுமடா! சொல்லுமடா! அமைதி! அமைதி!
நீலவானில் நீந்தியாடும் வண்ணவண்ண மீன்கள்!
காட்டுக்குள்ளே துள்ளியோடும் அழகுஅழகு மான்கள்!
உலகை நமக்கு வெளிச்சம்போட்டு காட்டுகின்ற கண்கள்!
உரைக்குமடா! உரைக்குமடா! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
தூக்கணாங் குருவியது கட்டுகின்ற கூட்டில்
இனிமையான குயிலுமது பாடுகின்ற பாட்டில்
மனிதருக்காய் உழைக்கின்ற நன்றியுள்ள மாட்டில்
தெரியுமடா! தெரியுமடா! திறமை! திறமை!
அயல்நாட்டில் இருந்து பறந்துவரும் புள்களும்
உள்நாட்டில் வீட்டில் குடியிருக்கும் எலிகளும்
நம்வாழ்வை பாவம் உரைக்கின்ற கிளிகளும்
கூறுமடா! கூறுமடா! உரிமை! உரிமை!
சூரியனுக் கெதிர்புரத்தில் தோன்றுகின்ற வில்லும்
சந்திரனைக் கண்டவுடன் பாய்ந்துவரும் சொல்லும்
சமுத்திரத்தின் உப்பினிலே நீந்திசெல்லும் கயலும்
பேசாது பேசுமடா! உண்மை! உண்மை!
வானத்தினில் நீந்திசெல்லும் அழகழகு மேகமும்
அதனைவிட்டு அழுதிருக்கும் வானமதின் சோகமும்
பாலையினில் செல்லும்போது நமக்கெடுக்கும் தாகமும்
செய்யுமடா! செய்யுமடா! நன்மை! நன்மை!