காதல் கவி!!

காதலில்
தட்பவெப்பம்
தலைகீழாய் மாறும்!

வெயிலும் குளிராய் வருடும்!
குளிரும் சூடாய் நெருடும்!

புயலும் தென்றலாய் படரும்!
தென்றலும் வேகமாய் இடரும்!

காதலில்
அக்கம்பக்கம்
மறதியை கொடுக்கும்!

மறக்க நினைப்பது
நினைவுக்கு வரும்!
நினைவில் நிலைத்தது
மறந்து போகும்!

காதலும் ஒரு
சடுகுடு விளையாட்டு!

சிலமுறை
காலைப் பிடிப்பதாலும்
வெற்றி கிடைக்கலாம்!

சிலமுறை நீ
வீழ்வதாலும் ஜெயிப்பாய்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Mar-13, 6:36 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 82

மேலே