ஏக்கம்
கானலாய்-
கதறியழும் கண்ணீர் ஆகுமென்று
ஆவலாய்-
அல்லலுற்றே காத்திருந்தோம்..!
மீதமாய்-
மீட்டுவைத்த சோகமெல்லாம்
தேய்பிறையாய்-
தேயுமென்றே தேகமிளைத்தோம்..!
சாபமாய்-
சங்கடங்கள் சூழ்ந்திருக்க
ஏகமாய்-
ஏளனங்கள் தாங்கி நின்றோம்..!
பாவமாய்-
பசித்தபடியே வயிறிருக்க
கோழையாய்-
குறுகியே வீழ்கிறோம்..!
வசதியாய்-
வறுமை மட்டும் வாழ்ந்திருக்க
மௌனமாய்-
மறைத்தபடியே மரணிக்கிறோம்..!
ஏழையாய்-
ஏகனவன் தந்த வாழ்வில்
எச்சிலாய்-
ஏக்கத்தில் கழிகிறோம்..!