பெற்றோர்களுக்கு

சிறு விதை தானே
என்று அலட்சியம் செய்தால்
நாளை மரம் எப்படி இருக்கும்!

எந்த விதையினுள்
என்ன..எப்படி..
இருக்கிறதென்பது
யாருக்கு தெரியும்!

ஆனால்..
ஒவ்வொரு சிறு விதையுள்ளும்
இலைகளும்..கிளைகளும்..
காய்களும் கனிகளும்
இருக்கத்தானே செய்கின்றன!

அப்படிதானே!
ஒவ்வொரு குழந்தைகுள்ளும்
நிறைய இருக்கின்றன.._ஆனால்
நாம் அதனை
புரிந்துக்கொள்வதில்லை!

நம் எண்ணங்களை
அவர்களுள் விதைத்தால்
பரவாயில்லை..!
ஆனால் நாம் திணிக்க
அல்லவே செய்கிறோம்!

அந்த சிறு விதைக்கு
என்ன தேவையோ அதை கொடுத்தாலே போதுமே!
அது நன்றாகவே வளருமே!

அழுத்தங்கள் நிறைய கொடுப்பதால்
பாதிப்பு விதைக்கு மட்டுமல்லாமல் விதைப்பவர்க்கும் தானே!

இனியாவது
புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள்..
சின்ன விதையும்
குழந்தையின் மனமும்
ஒன்றுதான் என்று!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (2-Apr-13, 12:49 am)
பார்வை : 113

மேலே