மணக்கோலத்தில் அவள்

என்றும்போல் அன்றும்
அந்தி மயங்கியது..
ஆதவன் தவமிருந்தான்
வானவீதியில்..
ஒளிரும் வெண்முகம்
காணவே..!

ஒற்றை வெள்ளியே
கண்சிமிட்டியது..
அந்த அம்மாவாசை இரவில் !

என்றும்போல் அன்றும்
மனம் மயங்கியது..
நானும் தவமிருந்தேன்
ராஜவீதியில்..
என்னவள்
புஞ்சிரிப்பினில்
திழைத்து எழ..!

என்றும் ஒற்றையாய் வருபவள்
அன்று ஊர்வலமாய் வந்தாள் !

பிறைநிலா சிரிப்பு
இதழ்களில்..
ஊர்வலத்தில்
மணக்கோலத்தில் அவள் !

_ மகா







எழுதியவர் : மகா (25-Nov-10, 8:00 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 582

மேலே