எதிர்காலம் ?

பார்க்குமிடமெல்லாம் பசுமை
எல்லாம் உழவனின் திறமை
பறக்கும் பறவைகளின் கானம்
எங்கே சென்றது அதன் பயணம்
வெறிச்சோடிய வானம்
எங்கும் கேட்கவில்லை
பறவைகளின் கானம்.......

அவசரநேரத்தில் அவசியம்
அலைபேசி -அதன்
ஆதிக்கம் நிலைபெற்றதால் தான்
என்னமோ சென்றது
பறவைகள் ரகசிய மொழிபேசி .......

நண்டுகள் வாழ்ந்த
நன்செய் நிலங்களும்
நகரமாகிவிட்டது
நாகரிக காலத்தில்......

வளமான பூமியும்
வாயைப் பிளந்தது
வானைப் பார்த்து.....

வான்நோக்கி வழர்ந்த
மரங்களெல்லாம் மண்ணோடு
மண்ணாக புதையுண்டது
வானூர்தியைத் தொடுமளவு
உயர்ந்த கட்டடங்களின்
அசுர வளர்ச்சியால் .......

இருக்க இடம் உண்டு
உடுத்த உடை உண்டு
உண்ண உணவு ?

விவசாய நிலங்களெல்லாம்
விலை நிலங்களாகி விட்டது

நெல் விழைந்த நிலமெல்லாம்
விலை உயர்ந்த க்ட்டடங்களாகி விட்டது

விழை நிலமெல்லாம்
விலை நிலமாகியதால்
விருந்தினராய் வந்த
பறவைகளும் வீடு திரும்பின
சொந்த நாட்டுக்கே .......

ஏர் பிடித்த உழவனும்
வருங்கலத்தின்
வறுமையைப் போக்க
பானைகளுடன்
பயணத்தை தொடர்கிறான் .....!

எழுதியவர் : எம்.எஸ்.பி.மலைராஜ் (4-Apr-13, 1:56 am)
சேர்த்தது : மலைராஜ்
பார்வை : 145

மேலே