கண்கள்

கண்கள்
என் வீட்டு
மீன் தொட்டிக்குள்
விளையாடும்
இரு தங்க மீன்கள் !

புருவ வில்லும்
பொன் இமையும்
இணைந்துப் பாதுகாக்கும்
பாதுகாப்புப் பெட்டகம் !

அகத்தின் உணர்வை
புறத்தே புகலும்
பூங்காவில் பூத்த
புத்தம்புது மலர்கள் !

உள்ளத்தின் உணர்ச்சியை
ஊமைபோல்
சொல்லத் துடிக்கும்
கண்ணீரில்
என் கண்கள் !

உலக வரைபடமாம்
நெற்றிக்கு கீழே நின்று
தேசங்களை நேசத்தோடு
பார்க்கத் துடிக்கும்
பாவை விளக்குகள் !

ஊருராய்த் தேடிப்பார்த்து
தாய்க் கருவின் இருட்டறையில்
சோடியாய் நின்று கொண்டு
பகல் இரவெனப் பக்கம்
பிரிக்காது பாடித் திரிந்த
காதல் பறவைகள் !

பார்த்தவுடன் இறக்கைக்கட்டிப்
பறவைகளாய் சிறகடித்துப்
பறக்கத் துடிக்கும்
சின்ன பிரம்மாக்கள் !
நாளங்களாய் இதயத்திற்கு
இன்னதென எடுத்தியம்பும்
நல் ஆசான்கள் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Apr-13, 3:25 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 148

மேலே