கடவுளெனும் வியாபாரலோகம்
எதை தொட்டாலும்
வியாபாரம் ஆக்கிய
மனிதனின் ஈனச்
செயலாக்கபட்ட
இப்போதைய
கடவுள் .......
கடவுள் என்ன
வியாபார
பண்டமா முட்டாள்
மனிதர்களே ...........
சிலை வைத்து
கடவுளுக்கே உலை
வைத்த கொடியவர்களே ........
அனுமதி சீட்டு
வைத்து கடவுளை
விபச்சார பொருளாக்கி
பக்தி விபச்சாரம்
செய்பவர்களே !
யாரை தரிசிக்க
அனுமதி சீட்டு
வழங்குகிறாய்
சந்தை படுத்தி
சதி வேலை
செய்கிறாய்
யோக சாதனைக்கு
பெயர் போன நாட்டில்-கடவுளை
போக பொருளாக்கி
போட்டியும் போடுகிறாய் !
காதலாகி
கசிந்து
அம்மையே அப்பனே
என்று தரிசிக்கும்
வாய்ப்பை இழந்த
மண்ணாகி
போனதோ
இந்தலோகம்
தரிசனம் செய்ய
வரும் பக்தனை
தள்ளி விடும்
தற்குறி காவலர்களின்
அட்டகாசம் அங்கும் கேட்டால்
சொல்வர் நெருக்கடி எங்கும்
என்பர் ............
பிரார்த்தனை என்றோர்
பெயரை சொல்லி
அரசியல் மாநாடு
நடத்துகிறாய் -மதமாற்றும்
வேலை செய்து கடவுளையும்
அரசியல் தலைவனாக்கிவிட்டாய்
தூய உள்ளத்தை
தொலைத்து விட்டு
வெறும் தூபம்
போட்டு பிழைக்கிறாய் !
அரைகுறையாய்
அறிந்தவனெல்லாம்
ஆன்மிக குருவாம்
அங்கும் செழிப்பாக
நடக்கிறது -
கடவுளை
வைத்து காசும்
புரள்கிறது!!!!
உள் கட எனும்
தத்துவம் அறிந்து
செயல் பட
துணிவற்ற
துரோகிகளே
துட்டுக்கு
தூண்டில் போடும்
துவேசர்களே !!!!!
நான்கு வர்ணம்
படைத்தானாம்
கொடுமை
என்னவெனில்
இதில் ஒரு இனத்தான்
மட்டுமே
உலகினில்
வாழ்கிறான்
வயிற்றுக்கு மட்டும்
பிழைப்பு நடத்தும்
வைசியனையே
எங்கும்
கண்டேன்
நான் !
****************************************
இப்படிக்கு
வியாபாரம் ஆக்கபடாத
கடவுளின் தொண்டன்
கார்த்திக்