காதலை காத்த நட்பு!
இவன் ஆண்,
அவள் பெண்,
இனம் மட்டும்
பார்த்து மதம்
மாறி காதல்!
நண்பன் இன்ன
மதம்,நண்பனின்
காதலியோ இன்னொரு
மதம்,காதல்
மட்டும் உயிர்
உடலென நெருக்கம்!
பழுத்த பலா
ஒளிக்க இயலா
வீசும் நறுமணம்
போல்,கொண்ட
காதல் வெளிவந்தது!
கதற கதற
கற்பழித்தவன் பலத்த
காவல் பாதுகாப்பில்!
மனசால காதலித்தாவன
கட்டிவைத்து கல்லடி!
பெற்றவர்கள் பாமரர்கள்
பெற்றவனின் காலில்
விழுந்து கதறினார்கள்!
வேணாம் ராசா
வீண் பொல்லாப்பு
எங்க உசுரு
நீ ஐயா
உனக்கு ஒன்னுனா
அழுதழுது மாண்டே
போவோம்,சொன்ன
கேள் அய்யா
என் ராசா!
பெண் வீட்டார்
பெரிய இடம்,
இவன கட்டிகிறதுக்கு
செத்து தொல
நாங்களே நல்லபடியா
அடக்கம் பண்ணிடறோம்!
இறந்த பிணத்தின்
துணி விலகி
இருந்தாலும் ஈன
பார்வை பார்க்கிற
கேடுகேட்டவங்க
முன் நிலையில்!
முன் பதிவிட்டு
கற்பழித்த ஊர்பெரியவன்
தலைமையில் பஞ்சாயத்தாம்!
செய்தி அறிந்து
உடன் படிக்கும்
உயிர் நண்பர்கள்
பாய்ந்து பறந்து
வந்தார்கள்!
நண்பனின் பெற்றோரிடம்
இனி நாங்க
பார்த்து பாதுகாத்து
கொள்கிறோம் அழாதிங்க!
ஐயா உங்க
பொண்ண பொதச்சிட்டதா
நினைத்து எங்களோட
அனுப்பிடுங்க உங்களுக்கு
புண்ணியமா போகும்!
ரெண்டு பேரும்
தகுந்த வயது
உடையவர்கள் என
உதவிக்கு வந்த
காவல் நண்பன்
சொல்ல வேற
வழி இல்லாம
அத்தனை பெரும்
அடங்கி நிற்க!
பொண்ண பெத்ததவ
மண்ணை வாரி
தூவி சொல்றா
போடிபோ உனக்கு
உன்ன மாதிரியே
ஒரு பொண்ணு
பொறக்கணும் அவள
கட்டிகொடுக்க முடியாம
நீ நாதி
இல்லாம நிக்கணும்!
சாபம் முழுசா
சொல்லி முடியல
அதுக்குள்ள ஒரு
நண்பன் அந்த
பொண்ணுகிட்ட சொல்றான்
நான் பையன
பெத்துதரேன் அழாதே!