கர்ணன்களைத் தேடி
விழிகள்
மொழிகள் பேசுமெனில்
விழிகள்
வழிகள் காட்டுமெனில்
விழிகள்
வலிகள் அறியுமெனில்
அதை ஏன்
மண்ணிற்கு
தின்னக்கொடுப்போம்?
நெருப்பிற்கு
நொறுக்குத் தீனியாக்குவோம்?
விழிகள் புழுக்களின்
இரை(றை)
சரிதான்
கண்கள் புழுவின்
இரையாகலாம்…
கண்ணில்லாதவர் கால்பட்டு
அந்தப் புழுவே
இறந்து போகலாமா??
புழுவிற்கு
இரை கொடுப்பதைவிட
மனிதர்க்குக் கண் கொடுத்தால்
ஒரு புழு வாழும்
ஒரு வாழ்வு மாறும்
கேட்டதைக் கொடுப்பதற்கு
இங்கு கர்ணன்கள் இல்லை
அதே சமயம்
கேட்காமலே கொடுக்க
கண்கள் இல்லாமல் இல்லை…
நீ கொடுக்கும் விழிகள்
நாளை ஒரு இனத்தின்
விடுதலை ஈனலாம்
நம் தேசத்தில்
ஒரு நல்ல அரசியல் பேனலாம்
ஒருவேளை அவை
செவ்வாயும் காணலாம்
பார்வை கொடுங்கள்
பாவம் அவர்கள்
நண்பர்களே
இருக்கும்வரை
கண்கள் கொண்டு
கவிதை எழுதுங்கள்…
இறந்தபின்பு
கண்கள் கொடுத்து
கவிதை எழுதுங்கள்…
விழியிழந்தவர் வாழ்வில்