மெது மெதுவா யோகா
உழைக்காமல்
சேரும் வசதியில்
வாழ்வை தொலை!
சேரும் சகதியில்
ஊறும் நெல்லு
சோறும் கசக்கும்.
கனவை திற
காற்றாய் வரட்டும்
அத்தனைக்கும் ஆசை
படு !
தொடு சிகிச்சைக்கு
படு வேகமாய்?
மூளை இருப்பதை
முற்றும் துறந்தாயா?
பக்தா !
அன்பே சிவம்
அடிக்கடி (சொல்)
அத்தனைக்கும்
ஆசை படு !
இலவச இணைப்பாய்
தள்ளுபடி விலையில்
ஆகா !
கற்று தர வா
யோகா !
காற்றை விடு
மெதுவா
முன்னிரண்டு காலை
பின்னே வை!
பின்னிரண்டு கையை
முன்னே வை!
மெதுவா மெதுவா
யோகா !
கண்ணை மூடு
மூச்சை இழு
காற்றை விடு
கருத்தை மூடு
கொள்ளை
கறுப்பை வெளியே
எடு
வரி
பிடித்தமில்லை
தீட்சை பெறு
வா
மெது மெதுவா
யோகா !