பச்சைத்தமிழன் வாழ்வான்!

எல்லாம் எனக்குத் தெரியும்
என்றே தானே அலைபவன்
எதையுமிங்கே அறியாமல்
அய்யோவெனப் போவான்!

பிறரைப் படிக்கத் துணியாதான்
தன்னை வளர்க்கமாட்டான்
பிறவிப் பயனுமடையாமல்
பேதையாகச் சாவான்.

மற்றாரையும் உணராதான்
மனதை நலமே பழக்காதான்
சுற்றாரெவரு மில்லாமல்
அனாதையாக ஆவான்.

இயற்கை மகிமை புரியாதான்
இறையினருளை உணராதான்
செயற்கை கவரும் மயக்கத்தில்
சிக்கித்ததானே மாய்வான்.

உயிர்கள் போற்றா எவனுமே
மயிரினுங்கேவலமாவானே.
பயிரும் வாடப் பொறுப்பானோ
பச்சைத்தமிழன் வாழ்வானே!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா..

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (15-Apr-13, 10:54 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 123

மேலே