கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு ஒரு கவிதை

#கவிக்கோ_அப்துல்_ரகுமான்...
#நினைவு_தினம்_இன்று
#அதற்கு_ஒரு_கவிதை
#ஆக்கம் ; குமரேசன் கவிதை ரசிகன்

ஞானம் பெற
விரும்புகின்றவர்கள்
போதிமரம் தேடி
போக வேண்டாம்
கவிக்கோ அப்துல்ரகுமான்
'புத்தகம் தேடி' போங்கள்....

கவிஞனாக
ஆசைப்பட்டால்
இவருடைய
'கவிதைக்குள்' போங்கள்
உங்களை
கவிஞனாகச் செதுக்கிவிடும்....

கற்பனைக்கு
பஞ்சம் வந்தால்
கவலைப்படாதீர்கள்
இவரது கவிதைகளில்
'கற்பனைக்
கொட்டிக் கிடக்கிறது'
அள்ளிக்கொண்டுப் போங்கள்...

கவிதைத் தாகம்
தீரவில்லை என்று
யாரும் தவித்துக்
கொண்டிருக்க வேண்டாம்
இவரது எழுத்துக்களில்
கவிதைத் தடாகமே !
கட்டி வைத்திருக்கிறார்....

இவர் எழுதுகோலில்
'மை ஊற்றி 'எழுதவில்லை
'மெய் ஊற்றி ' எழுதியவர்...

இவருடையப் புத்தகங்கள் அங்கீகரிக்கப்படாதப்
'புனித நூல்கள்.... !'

இவரது கவிதை
கடல் போன்றது
ஓரத்தில் தேடினால்
சங்கு தான் கிடைக்கும்
ஆழத்தில் தேடினால்
'முத்துக்களே!' கிடைக்கும்....

இவரது கவிதையில்
'குறியீடுகள்'
குழந்தையாக விளையாடும்
'படிமங்கள்'
பருவப் பெண்ணாய்
நடைப்பயிலும்...
'தொன்மங்கள்'
மயிலாய்
தேகை விரித்தாடும்....

இவரது
படைப்புகள் எல்லாம்
எழுதுகோலால்
எழுதப்பட்டவை அல்ல
'எதார்த்தங்களால்'
எழுதப்பட்டவை....

புதுக்கவிதைக்குப்
புதுமை செய்தது
இவரது கவிதை தான்....

இவரது கவிதையில்
கவிதைக்கான
'இலக்கணத்தை' த் தேடாதீர்கள் !
'கவித்துவத்தோடு'
இலக்கிய மட்டுமே கிடைக்கும்...!

அவர் யாருக்காகவும்
எழுதவில்லை
ஏன் ?
அவரக்காகக் கூட எழுதவில்லை
அவருடைய 'ஆன்மா'விற்காக
மட்டுமே எழுதினார்.... !

இவரது கவிதைகளை
ஆய்வு செய்யாதீர்கள் .....!
'தாய்ப்பாலுக்கு
ஐஎஸ்ஐ முத்திரை'
அவசியமில்லை.....

நான்
அவரை வணங்கும் '
'பக்தன் ' அல்லர்....
தினமும்
பூஜை செய்யும் 'பூசாரி...!'

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (2-Jun-24, 3:23 pm)
பார்வை : 34

மேலே