விதி ஆடிய விளையாட்டு - உதிரும் பூ

காலை 9மணிக்கு தன் அப்பாவை இரயிலில் ஏற்றிவிட்டு வருவதற்க்காக
ராஜேஷ் தயார் ஆகி கொண்டு இருந்தான். கம்பெனி வேலையாக வெளியூர் செல்லும்
ராஜேஷின் அப்பா திரும்பி வர 5நாட்கள் ஆகும். அவர் திரும்பி வரும் வரை
குடும்ப வேலைகளை ராஜேஷ்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் ராஜேஷின்
குடும்பத்தில் மொத்தம் மூன்று பேர் தான். ராஜேஷ், அவன் அப்பா, அவன்
அம்மா.

அவனுடைய பெற்றோர்க்கு ராஜேஷ் ஒரே பிள்ளை என்பதால் அவனை செல்லமாக
வளர்த்துவிட்டனர். அவன் ஆசைகளை அவன் கேட்ட உடனே அவனுடைய பெற்றோர்கள்
நிறைவேற்றுவார்கள். அவன் தற்போது தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு
வேதியியல் துறையில் படித்து வருகிறான். வேதியியல் துறை அவனுக்கு
விருப்பமான பாடம் என்பதால் அவனே அதனை தேர்ந்தெடுத்து படித்து வருகிறான். ராஜேஷ் வாடா கிளம்பலாம் டைம் ஆகுது என அவனுடைய அப்பா அழைக்க உடனே
அவன் சென்று அவனுக்காக வாங்கிய pulser bike-ஐ எடுத்துக்கொண்டு வந்து
வீட்டு வாசலில் நின்றான். அவனுடைய அப்பா தன் மனைக்கு பாய் சொல்லிவிட்டு
வந்து வண்டியில் அமர்ந்தார். இருவரும் வீட்டை விட்டு கிளம்பி இரயில்வே
நிலையத்தை நோக்கி பயணித்தனர். இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்தனர். இரயில் வர ஐந்து நிமிடம்
தாமதம் ஆகும் என ஒலிபெருக்கியில் அறிப்பு வந்து கொண்டு இருந்தது.
அதற்க்குள் இராஜேஷ் கடைக்கு சென்று பயணத்தில் அப்பா உண்பதற்க்கு தேவையான
உணவு பொருட்களை வாங்கி வந்து கொடுத்தான். பிறகு அவனுடைய அப்பா நான்
திரும்பி வரும் வரை வீட்டையும் அம்மாவையும் பந்திரமாக பார்த்துக்கொள்.
அதிகமாக ஊரு சுற்றாமல் வீட்டிற்க்கு நேரத்திற்க்கு வந்துவிடு என அறிவுறை
கூறினார். ஐந்து நிமிடம் கழித்து இரயில் வந்ததது. அதில் அவனுடைய அப்பா
ஏறி அமர்ந்தார். அவருக்கு பாய் சொல்லிவிட்டு பைக் ஸ்டேன்டக்கு வந்து
தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு வீட்டிற்க்கு கிளிம்பினான் இராஜேஷ்.

அப்பா தன் கூட இல்லை என்பதால் வீட்டை நோக்கி வேகமாக பயணித்தான்.
அவன் முன்னே செல்லும் அனைத்து வாகனங்களையும் முந்தி சென்றான். தன்னை எந்த வாகனமும் முந்தி செல்லாத வகையில் வேகமாக சென்றான். வேகத்தின் விளைவு
நீண்ட தொடர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த தனியார்
பேருந்தில் நிலை தடுமாறி விட்டான். இவன் பேருந்தில் நேருக்கு நேர்
மோதிக்கொண்டான்.

மோதியதில் தலையிலும் இடுப்பிலும் பலத்த அடி ஏற்ப்ட்டது. சுய நினைவை
இழுந்து சாலையில் இரத்தம் வழிய கிடந்தான். அவனை சுற்றி பெரிய கூட்டம்
திரண்டது. அவன் தண்ணீர் தண்ணீர் என முனுங்கி கொண்டு இருந்தான். ஆனால்
அவனுக்கு ஒருவரும் தண்ணீர் கொடுக்கவில்லை. காரணம் அவனை தொட்டுவிட்டால்
போலிஸ் என வரும்போது நம்மையும் விசாரனைக்கு அழைப்பார்கள் என பயந்து
ஒருவரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் அவசர ஊர்த்திக்கும், போலிஸ்க்கும்
தகவல் கொடுத்தார். உடனே அந்த இடத்திற்க்கு போலிஸார் வந்தனர். அங்கு கூடி
இருந்தவர்களிடம் என்ன நிகழ்ந்தது என கேட்டனர். அங்கிருந்த ஒருவர் நடந்ததை
கூறிக்கொண்டு இருந்தார். இராஜேஷ் தண்ணீர் தண்ணீர் என முனுங்கி கொண்டு
இருந்தான். அதை கண்டு கொள்ளாமல் அங்கு நடந்ததை விசாரிப்தலியே குறியாக
இருந்தனர் போலிசார். விசாரித்து முடித்த பிறகு அவன் யார் என்பதை அறிந்து
கொள்ள அவனருகே சென்று அவனுக்கு தண்ணீர் குடிப்பாட்டி அவனிடமிருந்த
அனைத்து பொருட்களையும் போலிசார் எடுத்து வைத்துக்கொண்டனர்.

காலதாமதமாக வந்தது அவசர ஊர்தி. உடனே ராஜீவை அந்த அவசர ஊர்தியில்
ஏற்றிவிட்டு அதனை பின் தொடர்ந்தனர் போலிசார். அவனுடைய கைப்பேசியில்
இருந்த எண்களுக்கு போலிசார் போன் செய்து மருத்துவமனைக்கு வர சொன்னனர். அவனுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்த செய்தி
தெறியப்படுத்தப்பட்டது. அவனுடைய அப்பா தன் பயணத்தை பாதியிலே விட்டு
பேருந்து ஏறி திரும்பி வந்தார். அவனுடைய தாய் செய்தியை அறிந்தவுடன்
கூப்பாற்று போட்டு அழுது கொண்டே ஆட்டோ ஏறி மருத்துவமனைக்கு வந்தாள். தன்
மகன் ஐ.சி.யு-வில் இருப்பதால் அவர்களுக்கு அவனை பார்க்க அனுமதி
வழங்கப்படவில்லை.
டாக்டர் ஐ.சி.யு-வை விட்டு வெளியே வந்தார். இருவரும் கண்ணீர் மல்க
அவரிடம் சென்று அழுது கொண்டே கேட்டனர், "என்ன ஆச்சு டாக்டர்" என. உங்கள்
மகன் பிழைக்க மாட்டான் என கூறினார். ஒரு ஐந்து நிமிடத்திற்க்கு முன்பே
அவனை இங்கு கொண்டு வந்து இருந்தால் அவனை பிழைக்க வைத்து இருக்கலாம்.
எல்லாம் கைமீறிபோச்சு என டாக்டர் கூறி கைவிறித்துவிட்டார். உங்கள் மகனோடு
பேச வேண்டுமெனில் உள்ளே சென்று பேசுங்கள் என கூறி அங்கிருந்து அவர்
சென்றுவிட்டார்
என் மகனே.. உனக்கு என்னாட ஆச்சு.. உனக்கு ஒன்னும் ஆகாதுடா..
பயபடாதடா.. என கூறி கொண்டே அவன் தாய் அழுது கொண்டு இருக்க.. அவன் தண்ணீர்
தண்ணீர் என முனுங்கி கொண்டு இருந்தான். உடனே அவனுடைய அப்பா தண்ணீர்
எடுத்து கொண்டு வந்து அவன் வாயில் மெதுவாக ஊற்றினார். தண்ணீர்
குடித்துகொண்டே அவன் உயிர் உதிர்ந்துவிட்டது.. அவன் தாய் தந்தையின் அழுகை
சத்தம் மருத்துவமனை முழுவதும் ஒலித்தது. தற்போது அழுதுகொண்டே பினைத்தை
வீட்டிற்க்கு தூக்கி கொண்டு வந்து புதைக்க ஏற்பாடுகள் செய்து
வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அவன் மண்ணோடு மண்ணாக மாற
போகிறான். (படித்ததுக்கு மிக்க நன்றி.. மேலும் தங்களின் கருத்துக்களை எனக்கு
தெரிவிக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்..)

எழுதியவர் : கார்த்திக் (16-Apr-13, 8:38 pm)
பார்வை : 279

மேலே