ஜா"தீ "

எங்கும் ஓடுது ரத்த வெள்ளம்
எரிந்து மடியுது மனித இனங்கள்
ஒற்றுமை உணர்வு மறந்து போச்சு
கலவரம் இங்கே நிரந்தரமாச்சு ......

குணம் மறப்பான்
கூரைகள் எரிப்பான்
மரங்களை போலவே
மனிதனை எரிப்பான் .........

கலவரம் வெடிக்கும்
கர்ப்பை பறிக்கும்
உடமைகள் எல்லாம்
தீய்க்குள் மூழ்கும் ..........

மிருகம் பிறக்கும்
மனிதம் மடியும்
சமாதானம் மறந்து
சண்டையே இருக்கும் .........

தாலியை இழக்கும் பெண்ணும் உண்டு
தந்தையை இழக்கும் பிள்ளையும் உண்டு
பிள்ளையை இழக்கும் பெற்றோரும் உண்டு .......

மண்டை பிளக்கும்
உறுப்புகள் தொலையும்
ரத்தம் பீரிட்டு
சகதியாய் தேங்கும் ........

இழப்புகளே நிரந்தரம்
உயிர்பலியே இலக்கு
வன்முறையே தொடர்கதை
வாழ்க்கையே சூனியம் .......

எங்கும் கேட்கும் மரண ஓலம்
அழுகை சப்தம் காற்றை நிரப்பும்
பெண்கள் கண்கள் கண்ணீரில் கரையும்
பொதுவாய் இதனால் என்ன லாபம் ......

தேவை இல்லாத கோபமும் இருக்கும்
தெளிவு இல்லாத சிந்தனை இருக்கும்
வம்பை தேடி அலையும் உள்ளங்கள்
அன்பை மறந்து அழிவது ஏனோ .........

விட்டுக்கொடுக்கும் மனம் கெட்டுபோச்சு
இன்பம் எல்லாம் துன்பமாய் போச்சு
மரமும் செடியும் கொடியும் கூடி வாழுது
மனிதம் மட்டும் ஏனோ மறக்குது ......

எழுதியவர் : வினாயகமுருகன் (19-Apr-13, 5:30 pm)
பார்வை : 47

மேலே