சிவப்பு விளக்கு ந(ண்)பர்கள் !
வெள்ளை விளக்குகளுடன்
வெளிச்சம் போட்டு வரும்
வாகனங்களைத்
திரும்பிப் பார்க்கிறபோது
சிவப்பு விளக்குகளோடு
சிரித்துக் கொண்டு
போவதைப் போலத்தான்
முகஸ்துதி செய்துகொண்டு
வரும் ந(ண்)பர்களும்...
திரும்பிப் பார்த்தால்தான்
அவர்களின்
"சிவப்பு"க் குணம் தெரிகிறது !