இதுதான் காதலோ??
மருண்டு ஓடிய
மான்களை
நிறுத்திக் கேட்டேன்,
ஏன் இப்படி ஓடுகிறீர்கள்??
என்று,,,,,
மான் விழிகளுடன்
கூடிய ஓர்
அதிசயப் பெண்
வந்து உள்ளாள்,
அவளைக் காணவே
என்றன மான்கள்!
ஆடும் மயில்
ஓடுவதைக் கண்டேன்,
என்னவென்று கேட்டேன்??
என் இறக்கை
அழகு வண்ணத்தை
விஞ்சும் அளவில்
ஓர் உடையணிந்து
ஓர் அதிசயப் பெண்
வந்து உள்ளாள்,
அவளைப் பார்க்கவே
என்றது மயில்...!!
யாரங்கே!!
சற்று காது
கொடுத்துக் கேளுங்கள்!
யார் சொன்னது
தேவதைகளுக்குக் கால்கள்
இல்லையென்று,,,,,,,,,,,,,,,,
நான் பார்த்தேன்
கால்கள் உள்ள
ஓர் தேவதையை.......!!
உன்னைப் படைக்கும்
போது மட்டும்
பிரம்மன் தன்
காதலியின் நினைவலைகளில்
இருந்திருப்பானோ??
நல்ல வேளை
விசுவாமித்ரர் தற்போது
இல்லை,
இருந்திருந்தால் எனக்குப்
போட்டியாக வந்திருப்பார்
உன்னைக் காதலிக்க!!