kiramathuthu muthirkanni

எங்குட்டு தேடியும்
கிடைக்காத உங்க முகத்த
என்னண்டு நா சொல்ல
பாக்குற பக்கம் எல்லாம்
இந்த சிரிக்கிக்கு
எதோ பாழாப்போன
நினைப்புனா சொல்ல

என் செட்டு பொண்ணுகலாம்
கையிலும் வகுதிலுமா
வளைய வர
ந மட்டும் ஓத்த மரமா
பட்டு கிடக்கேன்

ரவை எல்லாம் தூக்கம்கெட்டு
வயசால வெசனபட்டு
ஆத்தாடி அந்த கதை
யாருட்ட நா சொல்ல

ஆடு மேய்குற அப்பனுக்கே
எத்தன நாள் கஞ்சி குடுக்க
கூர புடவை கட்டிகிட்டு
மாமோய்னு கத்திகிட்டு
என்னைக்கு தான் உங்களுக்கு
இந்த மரத்து போன கையாள
வகுராற விருந்து வைக்க

ஆசையெல்லாம் புத்து கிடக்கு
ஆகாசமும் வெளுத்து கிடக்கு
ஊரே விழிச்சு கிடக்கு
இன்னும் விடியாத
என் வாழ்க்கைக்கு
வெளிச்சம் தர வாரீகளா

சோசியருங்க கைபட்டு
என் சாதகமும்
என்ன போல கசங்கிருச்சு
தோசம் இருக்குனு
பன்னாத பரிகாரமில்ல
ஆனா,
சந்தோசம் மட்டும் இல்லயே
அந்த கணக்குக்கு எந்த
சோசியர்கிட்ட விளக்கம் கேட்க

நாலு பேர்ட்ட மை வச்சு பாத்தாக
நீங்க வர தேச கேட்டு
ஆளாளுக்கு ஒரு தேச சொல்ல
ஆகாசம் தான் பாக்கி இருக்கு

ரெண்டுல ஒன்னு சொல்லிபுடுக
வருவீகளா மாட்டிகளா
கனவுலையே குடும்பம் நடத்தி
கண்ணு ரெண்டும் கருத்துப் போச்சு

என் ராசா
எங்குட்டு தேடியும் கிடைக்காத
உங்க முகத்த
என்னண்டு நா சொல்ல

எழுதியவர் : thendral (30-Nov-10, 9:11 am)
சேர்த்தது : thendral
பார்வை : 553

மேலே