பாரதி

பிறப்பு எனும் சிறப்பினை எய்தி
பொறுப்பு எனும் வெறுப்பினைத் தாங்கி
சிரிப்பு எனும் செழுமையை மறந்து
தமிழுக்காக வாழ்கையை துறந்து
இறப்பு எனும் முழுமையை அடைந்தான்
- பாரதி
பிடி மிதித்து தமிழ் இறந்தது அன்று ! ஆனால்
படிக்கும் தமிழே மறந்தது இன்று !
இயலிசையில் சிறந்த எம்தமிழ் ,என்றும் உங்கள்
அயல் அசையில் அடங்காது !
இன்று தூங்கும் செந்தமிழ் மொழி !
ஒருநாள் ஓங்கும் ,அன்று
இச்செந்தமிழனின் கை அதைத் தாங்கும் !

- வினித் மணிமாறன்

எழுதியவர் : வினித் மணிமாறன் (23-Apr-13, 10:51 am)
சேர்த்தது : Vinith Maran
Tanglish : baarathi
பார்வை : 80

மேலே