பாச கிளிகள்

நானோ என்பது வயது முதியவன்
மனைவி மரணமாகிவிட்டால்
பிள்ளைகள் தனியே பறந்துவிட்டார்கள்
நான் மட்டும் தனிமையில் ......

செடிகலோடும் பூக்களோடும்
பேசிப்பழகிய எனக்கு
கிளிகளோடு பேசி வாழ ஓர் ஆசை ........

ஆசையாய் வாங்கினேன்
ஒரு ஜோடி கிளிகள்
அன்பாய் வளர்த்தேன்
என் இரு விழிகளில் .......

என் தனிமை பொழுதுகளில்
எனக்கு இவர்கள்தான் நண்பர்கள்
இவர்கள் எப்பொழுதும் பேசுவார்கள்
நான் எப்பொழுதாவதுதான் பேசுவேன் .......

உறவுகளே இல்லாத இந்த
தனித்த உலகில்
எனக்கென உறவுகளாய்
இவர்கள் இருவரும் ..........

இவர்களை பராமரிப்பதும்
உணவளிப்பதும்
வருடிகொடுப்பதும்
எனக்கான பொழுது போக்கு .........

எத்தனை சுமைகள்
நெஞ்சிளிருந்தாலும்
கிளிகளின் கொஞ்சல்கள்
அத்தனையையும் கொள்ளும் .........

என் படுக்கைக்கு அருகிலே
கிளிகளுக்கும் கூடு
கன்னுரங்கும்போதும்
விழிக்கும் போதும் அழகாய் வணக்கம் ......

கிளிகளின் கொஞ்சல்கள்
நெருடல்கள்
விளையாட்டுக்கள் அத்தனையும்
ரசிக்க ரசிக்க ஆனந்தம் ........

இது எனக்கான நபர்கள் உலகம்
இங்கு பகைமையும் இல்லை
துரோகமும் இல்லை
அழுகையும் இல்லை
நட்பு மட்டுமே ...............

கூட்டை திறந்ததும்
பறந்து வந்து
என் தோள்களை பற்றிக்கொள்ளும் இரண்டும்
இடப்புறம் வலப்புரமுமாக .........

நாட்கள் ரசனையோடு கழிந்தன
ஒவ்வொருநாளும் புன்னகையோடு பயணம்
வாழ்க்கை இனித்தது ........

ஓர் நாள் ...........
எப்பொழுதும் விடியும்
சாதாரண விடியல்
பதட்டத்துடன் பெண் கிளியின் கதறல்
பதறிப்போய் கூட்டை திறந்துபார்த்தேன்
நிரந்தரமாய் உறக்கத்தில் மரணித்தது ஆண் கிளி ....

சொல்ல முடியாத துயரம் அது,
பெண் கிளி ,
அந்த நிமிடம்முதல் அமைதியாய் .........

ஏக்கத்தில் ஏங்கி தவித்தது
உணவும் மறுத்தது
உறக்கம் மறந்தது
துக்கம் தொடர்ந்தது
அதுவும் நிரந்தர துகில் கொண்டது
மறுநாள் ................

இடையில் வந்த இருவரின் உறவு
இதற்கும் ஏனோ நிரந்தர பிரிவு
தனிமையில் நான் மட்டும் நாளை கழிக்கிறேன்
கிளிகள் இறந்த சோகத்தில் தவிக்கிறேன் நான் .....

எழுதியவர் : vinaayagamurugan (24-Apr-13, 7:06 am)
Tanglish : paasa kilikal
பார்வை : 254

மேலே