அம்மா மனசு

உயிரின் உள்ளே,...
உந்தன் உயிரின் உள்ளே
என் உயிர் வளர்த்தாய்
என்னை வளர்த்தாய் .

உந்தன் உதிரமெலாம்,
உதிரமெல்லாம் பாலாக்கி ,
ஊட்டி வளர்த்தவள் நீயே..!

நெஞ்சோடு சேர்த்தணைத்து ,
உன்னையே பிழிந்தெடுத்து ,
அமுத மொழி தந்தவளே..!

கண்ணுக்குள் கண்ணாக ,
இமைக்குள்ளே விழியாக,
நெஞ்சுக்குள் நினைவாக
உருவாக்கம் ஈந்தவளே.

சரிந்தே விழுகையிலும்
தாங்கி என்னைப் பிடிப்பவளே..!

உந்துயரம் நானறியேன் ,
என்துயரை மறைத்தாலும்
கண்டுணர்ந்து தீர்ப்பவளே.

காலமெல்லாம் உந்தன்
மனதில் தாலாட்டும்
தாய் நீயே.!

இன்னொரு பிறவி
எடுத்தாலும் உனக்கே
மகவாய் பிறப்பெடுத்து ..

பாசச்சுமைதனை சுமந்திடவே.,..
பாக்கியம் நான் செய்ய ..,
வேண்டுமம்மா..!

எழுதியவர் : மின்கவி (24-Apr-13, 7:39 am)
பார்வை : 175

மேலே