சொல்லத்தான் ஆசை
நீ கேட்காத கேள்விகளுக்கும்
பதில்கள் என்னிடம்...
பத்திரமாய் பாதுகாப்பேன்,
பதிலிருப்பேன்...
நீ கேட்டல் மட்டும்...!
நித்திரை முழுசாய்
நீளும் முன்னே
வாய் திறந்து கேட்டிடு...ஒரு
வாய்ப்பும் கொடுத்திடு...!
விளக்கங்கள் கொடுத்து
பழகியவள் இல்லைதான்-ஆனால்
விளக்கத்தான் ஆசைப்படுகிறேன்
உனக்கு மட்டும்....!
உன் அவசர உலகம்
அரவணைத்து கொண்டது
உன்னை மட்டுமே....
என்னைப் புறந்தள்ளிய அதன்
போக்கும் உனக்குப் புரியுமோ?
நீ இழந்தது உன் வாழ்க்கையை
மட்டும் அல்ல....
கூடவே என்னையும்தான்.
நரை கூடி தோல் சுருங்கி
தளர்ந்த என்னை..
நீ பார்க்கும் நாளிலாவது
சொல்லத்தான் ஆசைப்படுகிறேன்...
நீ தெரிந்து கொள்ளாத
என் சோகத்தை.......!