திணிக்கப் படும் தீவிரவாதம்.. திரிக்கப் படும் தீவிரவாதம்.!
தீவிரவாதிகள் என்பவர் யார்.?
தூண்டும் மூலக் காரணிகள் எது.?
தீவிரவாதத்தின் உண்மை என்ன?
தீவிரத்தின் தன்மை தான் என்ன.?
............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
லட்சியத்தின் லட்சனம் என்ன?
உந்தப் பட்டதின் பின்னனி என்ன.?
உள்ளக் குமுறலின் ஓசைகள் என்ன.?
உரிமைக்கு விளைந்த பாதகம் என்ன.?
.........︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
மறுக்கப்படும் நீதியின் நிர்பந்த நியதியிது
பறிக்கப்படும் உரிமையின் பிரபலிப்பிது
அடக்குமுறைக்கெதிரான ஆவேச விசையிது
அடிமை தனத்துக்குள் அடங்கா ஆக்ரோஷமிது!
.............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
இழந்த பொறுமையின் இடி முழக்கமிது
இனி பொறுக்க முடியாததின் போராட்டமேயிது
கேட்டுக் கிடைக்காததின் ஏமாற்ற ஏக்கமிது
தானாய் எடுக்கத் துணிந்த தன்மானத் தாக்கமிது!
..............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
தானாய் முளைத்து விட புதர்ச்செடி அல்ல
தாளாமல் வெகுண்டெழுந்த தன்மான உணர்ச்சி
மரணத்தையும் மதியாத இன மான எழுச்சி
மாற்றங்கள் எதிர்பார்க்கும் மகத்தான புரட்சி!
...............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
சமுதாயம் பெற்ற பிள்ளை தான் இது
சரிசமம் காட்டாத அநாதையும் இது
சுண்ணாம்பை வைத்துவிட்ட சூழ்ச்சி இது
சமரிலே சகலமும் பெறத் துடிக்கும் கூட்டமிது!
...........︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
கிள்ளியெறிந்திட துள்ளியெழும் வித்துயிது
வேரறுக்க நினைத்தால் கருவறுக்கும் கத்தியிது
கருணையோடு கலந்திட கனிந்துருகும் பக்தியிது
மானுடம் சிறக்க மாற வேண்டிய சக்தியிது!
...............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
தீவிரவாதிகள் பிறப்பதில்லை
சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள்
நோக்கமறிந்து தேற்றமளித்தால்
தீவிரவாதத்தின் தோற்றம் இல்லை எங்கும்.!
................︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}