நாங்கள் மான் இனம்
விலங்குகளில் நான் மென்மையானவள்
விபரம் அறியா பெண்ணானவள்
காட்டில் திரிந்து வாழ்க்கை வாழ்பவள்
கண்ணுக்கு தெரியா சிரமம் காண்பவள் .......
எங்கள் உலகம் தனி உலகம்
எல்லைக்குள்ளே எங்கள் வாழ்க்கை
புல்லும் பூண்டும் எங்கள் உணவு
மண்தரையே எங்கள் மெத்தை .......
துள்ளி திரியும் மான்கள் நாங்கள்
தொல்லைகள் நாடும் இனமும் நாங்கள்
இரவு பகல் உறக்கம் இல்லை
துன்பம் தானே எங்கள் வரம் ......
பெண்களுக்கு நாங்கள் பிடித்த விலங்கு
எங்களை அவர்கள் கொஞ்சுவது அழகு
நேசம் நிறைந்த அவர்கள் ஸ்பரிசம்
சொல்ல முடியாத உணர்வுகள் அது .......
கூட்டமாய் வாழும் இனங்கள் நாங்கள்
கொள்ளை போகும் இனங்கள் நாங்கள்
கொடுமைகளை சொல்லும் வார்த்தைகள் இல்லை
இயற்க்கை மரணம் எங்களுக்கில்லை .......
அடித்து திங்கும் காட்டு சிங்கம்
அம்பால் கொள்ளும் நாட்டு சிங்கம்,
கண்ணெதிரில் மடியும் உறவுகளை பார்த்து
கண்களில் தினமும் கண்ணீர் வருது .......
சைவ பிறவி எங்கள் பிறவி
அசைவம் ஆகும் வேண்டா பிறவி
மானிடன் கண்ணில் பட்ட வேளையில்
மறுகணமே நாங்கள் தோளுக்கு சாகிறோம் ......
இறக்கம் கொண்டவர்கள் இங்கு இல்லை
ஒளிந்துவாழும் எங்களை துரத்தி
வலிந்த மனிதன் வெல்வது என்பது
வெற்றி அல்ல கோழைத்தனமே .........
வாழவிடுங்கள் வாழவிடுங்கள்
உங்கள் உறவை நேசிப்பதைப்போலவே
எங்களையும் கொஞ்சம் நேசித்திடுங்கள்
எங்களையும் என்றும் வாழவிடுங்கள் ...............