மனம் ஏனோ கசந்தது.........

இளம்சூரியன் பட்ட பனித்துளியாய்
அதிகாலையில் ஏனோ
உன் நினைவுகள்.............
துயில் கலைந்த நான் நிழலாய்
உனை தேடிய போது
நிஜங்கள் நினைவுகளை கனவென்றென............
காலை நேரத்து உறக்கம்
இன்னும் மிச்சமிருந்தது......
மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..
கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.....!!!