ஒரு தாயின் கண்ணீர்
பத்து மாதம் உன்னை
சுமந்து பெற்றெடுத்தேன்
பத்து நிமிடம் கூட
உன்னை பிரிந்ததில்லை
என் அன்பு மகளே ...
கல்வி கற்பதற்காக
நீ என்னை விட்டு
தொலைவில் சென்றாலும்
உன் நினெவுகல் என்னை
வாட்டுதடி ....
எப்போது திரும்பி வருவாய்
என்று வாசல் வந்து
அடிக்கடி பாதையை
எட்டி எட்டி பார்கிறேன் ...
ஒரு டாக்டராக வரவேண்டும்
என்ற நன் நோக்கம்
உன்னிடத்தில் இருப்பதால்
காத்திரிக்கிறேன் மகளே
உன்னை எதிர் பார்த்து
அடக்க முடியவில்லையடி
என் கண்ணீரை ....
உன் குழந்தை தனமும்
உன் விளையாட்டு புத்தியும்
நினெவுக்கு வரும் போது
குமாரியான நீ குழந்தையாக
இருப்பதை கண்டு மனசுக்குள்
மகிழ்ந்தேனடி ....
உனது இந்த சிறிய பிரிவை கூட
என்னால் தாங்க முடியவில்லையடி ....
என் மடியில் தூங்க உடனே வந்து விடு ...
இல்முன்னிஷா நிஷா