உதய பூக்களே...!

உதய பூக்களே...!
--------------------------------
இதயம் நிறைந்த இளைஞர்களே!
இளம் பெண்களே!

மழையில் நனைந்த பறவை
ஈரமாகிப் போன இறக்கைகளோடு
பறக்க முடியாமல் பரிதவித்து
இமைகள் கவிழ,குளிரில் ஒடுங்கி-
உயிரில் நடுங்கி மரக்கிளையோரங்களில்
அடங்கி நிற்குமே! அப்படித்தான்
இதோ இந்த மணி நேரத்தில்,
உங்கள் இருதய ஓரங்களில்
இதமான சூடு தேடி நிற்கிறேன்.

இந்த சமுதாயத்தை திருத்திவிடலாமென்கிற
குருட்டுத்தனமான நம்பிக்கையோடு
இந்தக் கருத்தை எழுதவில்லை
எனது எழுதுகோல், திருத்தலாமே
என்று சொல்லுகிற முயற்சியிலேயே
எப்பொழுதும் அசைந்து கொண்டிருக்கும்.
இந்த உலகத்தில் கருத்துக்கள் இரண்டு
வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒன்று- அப்போதும் மட்டும் கையாள கூடியவை
இரண்டு - எப்போதும் கையாள கூடியவை

இந்தக் கருத்தை எந்த வகையில்
சேர்ப்பது என்பதை உங்களின்
சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

இளைய நெஞ்சங்களே!
நீங்கள் வாழும் காலகட்டத்திலாவது
ஜாதி-மதம்-இனம்-மொழி இவைகளையெல்லாம்
கடந்த பரந்தவெளியில்
மனிதர்களோடு பழகுங்கள்.

உங்கள் பாதை புதிது-பயணம் புதிது.

இதுவரை பார்வையாளர்களாக இருந்தது போதும்
பங்கேற்பவர்களாக வாருங்கள்
முன் வந்து பொறுப்பேற்கவும்
அடங்கி நின்று பின்பற்றவும்
பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

முதல்வனாக இருங்கள் இல்லையென்றால்
முதல்வனோடு இருங்கள்
எவருக்கும் பயப்படாமல்
எமனுக்கும் பயப்படாமல் சாவைக்கூட
சஞ்சலப்படுத்துகிற சத்திரியர்களாக இருங்கள்.

எல்லா விஷயத்திலும் எளிமையாக இருங்கள்
எந்த விஷயத்திலும் சாதாரணமானவர்களாக
இருக்காதீர்கள்.

நீங்கள் தினமும் வளர வேண்டியவர்கள்.

உனது முடிவு எது?-உனக்கு முடிவு எது?
என்பதை முடிவு செய்து,இயற்கையாக
உங்கள் பயணம் தொடர வேண்டும்.

நமது முன்னோர்களின்,
குற்ற உணர்ச்சிகள், பாவ உணர்வுகள்.

அவமானங்கள் இவற்றின் பாதிப்புக்கள்
எதுவும் நம்மீது படர்ந்து விடாமல்
நம்மை நாமே அவதானித்துக் கொண்டு
ந்ம்மை நாமே கற்றுக் கொண்டு
வாழ்க்கையைத் தொடங்கினால்,

நமது வாழ்க்கை உருப்படும்,
வரலாறு பலப்படும்
அப்போது,

பனிமலை முற்றத்தில்
படர்ந்து நிற்கும் பன்னீர் பூக்களாய்
இருதயத் தமனிகள் உயிரை சிலிர்த்துக் கொண்டு
உற்சாக நதியில் உற்சவம் நடக்கும்
உள்ளங்கால்கள் உயரத்தில் நடக்கும்:

இளைய நெஞ்சங்களே!
முழுக்க முழுக்க அறிவுரையாக
இருக்கிறதென்று முகம் சுழிக்காதீர்கள்.

நல்ல மருந்து கசப்பாகத்தான் இருக்கும்.
21-ம் நூற்றாண்டில்,
இளமையைச்சுற்றி,சூழ்ந்து நிற்கும்
கள்ளக் கருக்கிருட்டை கவிழ்த்துப் போட
தீ வட்டிகளோடு புறப்படுகின்ற தீர்க்கமான
இளைஞர் இளம் பெண்களாக நீங்கள்
இருக்க வெண்டுமென, இசைபாடும் சொற்களால்.
உங்கள் திசை நோக்கி வாழ்த்தி வணங்குகிறேன்.

அனுபவ அறிவை கேட்கும் இடத்தில்
கேட்காமல் கெட்டவனும் உண்டு
கேட்காத இடத்தில்
கேட்டு கெட்டவனும் உண்டு.

எழுதியவர் : Anbuselvan (10-May-13, 2:21 am)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 74

மேலே