ஏரிக்கரை அய்யனார்.......!!!!!!
ஏரிக்கரையின் மேற்கில்
இலையுதிர்ந்த
கருவேலங்காட்டில்
கிழக்கை நோக்கி
சிதையுண்ட
சிலைகளின் நடுவே
உக்கிர பார்வையும்
முறுக்கு மீசையுமாய்
முரட்டு தேகத்துடன்
வால் உடைந்த
குதிரையின் மேல்
கை வாளுடன்
வீற்றிருக்கும்
அய்யனார்!!!
ஆள் அரவம் அற்ற
நடு நிசியில்
உயிர் பெற்று
ஒனாயிகளின் ஊளை
சத்தத்தின் பின்னொலியில்
தீபந்தங்கள் மிளிர
சலங்கைகள் ஒலிர
மதம் கொண்ட
குதிரையின் மேல்
ஆங்கார சிரிப்புடன்
தன் சகாக்கள்
புடைசூழ
பூமிக்கும்
வானுக்கும்
இடைப்பட்ட
நீண்ட வெளியில்
பெரும் ஒளி பரப்பி
எதிர்பட்ட தீயவைகளை
அக்ரோசமாய்
வேட்டையாடி
காவல் தெய்வங்கள்
சூழ்ந்து
ஓங்கார ஒலி எழுப்ப
கொண்ட சீற்றம் தனிய
ருத்ர தாண்டவம் புரிந்து
விண்ணைப் பிளக்கும்
வெடி சிரிப்பில்
சற்றே சினம் தணிந்து
விடியும் வேளையில்
பூமி திரும்பும்
வழியில் உயிர் பிரிந்து
மீண்டும்
சிதையுண்ட
சிலைகளின் நடுவே
சலனமற்று
வீற்றிருக்கிறார்
ஏரிக்கரை அய்யனார்.......!!!!!!