அம்மா

உன்னை பற்றி கவிதை எழுத
நேரம் பல கடந்தும் காத்திருந்தேன்
வார்த்தை ஒன்றுமே வாய்க்கவில்லை
அன்னையர் தினத்தில் உனக்கு பரிசளிக்க
ஆயிரம் வார்த்தைகளால்
கவிதை மாலை தொடுக்க நினைத்தேன்
ஒரு வார்த்தையும் கிடைக்காமல் திகைத்தேன்
உன் தியாகங்களை எழுதலாம் என்றால்
எவற்றை விடுத்தது எவற்றை தொடுப்பேன்
அவ்வாறு தொடுத்தாலும் ஒரு பெரும்
காவியமே படைக்கலாம் அல்லவோ !
நின்னின் பாசமோ வரையறை செய்ய முடியாதது
உன்னிடம் என் முதல் ஏமாற்றம்
நிர்ணயிக்க முடியா உன் நேசத்தால்
இன்று என் தமிழும் திகைக்கிரதே
நூறு கவிதை புனைந்த எனக்கு
உன்னை பற்றி எழுத வார்த்தை பஞ்சம்
ஏற்பட்டது ஏனோ
உன்னை பற்றிய குறைகளை உன்னிடம் கூறிவிட்டேன் நொடி பொழுதில்
நிறைகளை கூற வார்த்தையும் போதவில்லை
நேரமும் போதவில்லை
இன்னும் உன்னை பற்றி எழுதாமல்
பிதற்றுகிறேன்
வரியில் வடிக்க முடியா காவியமே
காவிய மங்கையர் எல்லாம் பிச்சை கேட்கும்
கற்பின் மருவுருவமே
முப்பெரும் தேவியரின் மொத்த உருவமே
புனைய முடியா புது கவிதையே
என்றும் உன் நிழலில் வாழும்
உன் பிள்ளைகளின் அன்னையர் தின வாழ்த்துகளை
வெறும் வார்த்தையில் மட்டுமே கூறுகிறோம்

எழுதியவர் : தர்ஷிகா (12-May-13, 12:20 pm)
Tanglish : amma
பார்வை : 150

மேலே