மனதை மட்டுமே ..

பணத்தை குறி வைத்து
வாழ்கை நடக்குது இங்கே !
மனதை குறி வைத்து
வாழ்கையை தருகிறார் ஒருவர் !
யாரும் யாருக்கும் இல்லை ! - பிடி
சோறும் வயிற்ருக்கு இல்லை !
என்கின்றான் ஒருவன் - அதனினும்
கொடியது கொலை என்றான்
மற்றொருவன் - அதனினும்
கொடியது காமம் என்றான்
இன்னொருவன் - இவர்கள்
அவரவர்க்கு உரிய எண்ணங்களை
மட்டுமே சொல்கின்றனர் - ஆனால்
இறைவனோ ! மனதை மட்டுமே !
குறி பார்க்கிறார்