இதயமும் இயங்க மறுக்கிறது

உன் கெண்டை விழிக் கண்ணாலே
எனை சுண்டி இழுத்தது
போதும் பெண்ணே..!
சற்றேனும் உன் கெண்டை
விழிகளை தூங்கச் சொல்...
உனைப் பார்த்ததிலிருந்து
என் விழிகள் இமைக்க
மறுக்கிறது..!
இதயமும் இயங்க மறுக்கிறது........!

எழுதியவர் : ரெங்கா (6-Dec-10, 6:21 pm)
சேர்த்தது : renga
பார்வை : 404

மேலே