நீ நான்

நீ நான்
*****************
வெளிவராத
திரைப்படத்தின்
அழகிய பாடல்

"உன் சுவாசிப்பு "

சிறுநாவில்
கட்டப்பட்டிருக்கும்
ஒலிநாடா

நெளிநாவின்
நகருதலால்
ஒரு ஊமை வாசிப்பு

"என் காதல் உரை"

உரிக்கப் படாத
உரிச்சொல் பகுபதம்

"நீ நான் "

மிதக்கிற பொழுதே
உன் காலச்சு தேடுகிறது
அக்கங்கள் ஆவலோடு

உன் பார்வை செப்பிடு மொரு
"ஏவல் வினை" தொடராதே என

உடைக்கச் செய்திடுமதையென்
"வியங்கோள் வினை "

தன்மை முன்னிலை படர்க்கை
இப்படி எல்லாவற்றிலும்
உன்னையே என்னில்
பதியச் செய்துவிட்டாயே

உரசல் இல்லாத
அரசல் ஊடல்களினால்
அடிசில் ஏற்கவும் மறுத்திடும் மனம்

அனுசரன்

கற்க கசடற - கற்றவை கைய்யளவே
***********************************************************
பகுபதம் - ஒரு உரிச்சொல்லை பிரித்தெழுதுவதன் மூலம் இரண்டு அர்த்தங்களை கொடுக்கின்ற இலக்கண பதம்

ஏவல் வினை - ஏவல் இலக்கணம் (உதாரணம் செய்யாதே,,,போகாதே என்பதை போல்)

வியங்கோள் வினை - முற்று பெரும் சொல் வினை ,,, நீ வாழ்க ,,நீடூடி வாழ்க ,,, இப்படி

அடிசில் - உணவு

தன்மை - தன்னை பற்றிய செயல்
முன்னிலை - நமக்கு முன்னால் உள்ளவரை பற்றிய பேச்சும் செயலும்

படர்க்கை - நாம் நமக்கு முன்னால் உள்ளவர் அல்லாது மூன்றாம் நபரைக் குறித்த பேச்சும்
செயலும்

அனு,,,,

எழுதியவர் : அனுசரன் (30-May-13, 7:07 pm)
பார்வை : 651

மேலே