பணம்
பலதேசம் வாழும் பலபேர்களில்
பணதிற்காய் பாதிப்பேர்-தலைக்
கனம் கொண்டு சிலபேர்
தலைக்கனம் கண்டு
சினம் கொள்ளும் ஒருசிலர்
குணத்திற்காய் இன்னொரு சிலர்
பணமோ பாதாளம் வரையாம்
பண்பற்ற பதர்களின் விளக்கம்
ஆடம்பரத்தின் அடிக்கல்லாக
ஆலயங்கள் அமையக்கண்டு
ஆண்டவனுக்கும் இல்லை அமைதி
திருமணச்சந்தையில் ஏறிவிட்ட
விலைவாசியின் விளைவு
பணம் இல்லாத ஏழைக்கெல்லாம்
மணம் கொள்ளாத தனிமைக்கோலம்
இன்றய நாட்களில்
குணங்கண்டு மனங்கொள்ளும் காதல்கள் கூட
பணங்கொண்ட இடங்களில்தான்
பற்றிக்கொள்கின்றன - இதில்
குணம் எங்கே? மனம் எங்கே?
நெற்றிச் சில்லறை கூட
பற்றிச்செல்ல முடியாத வாழ்வில்-பெற்றோரே
சீதனச் சில்லறைகளாக சிறார்களை
அச்சிட வேண்டாம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
