ஜூன் 16, 1980.
பொருளாதாரம் அன்று
பொத்தென விழுவதும்
அருளாதாரமாய்ப் பெற்ற
கடனில் வாழ்வதும்
உருளாதா இத்தினம்
என்று மயங்கியே
மருகிடும் மக்கள்
மிகுந்த காலமது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பதின் துவக்கம்
சாய்ந்து கொண்டிருக்கும்
கோபுரத்தைப் போலே
இருபது விழுக்காடு
பணவீக்கம் பெருகிட
சுருங்கிய உலகதில்
விரிந்தது “பொது உடைமை”.
வேலை இன்மையும்
விழும் பொருளின்மையும்
மேலைத் திசையிலிருந்து
இறக்குமதி ஆகிட
சேலை கட்டியவரும்
செருக்குடன் எழுந்து
வேலைக்குச் செல்ல
வரிந்து கட்டினர்.
ஆண்டதன் துவக்கம்
அதிரடியே ஆயினும்
அன்னை இந்திரா
தேர்தலில் வென்றார்.
“சிஎன் என்”தன் செய்தி
ஒலி பரப்பினை
“டெட் டர்னர்” உடன்
செய்திடக் கிடைத்தது.
கணக்குப் பாடத்தில்
இணக்க அரசியாம்
சகுந்தலா தேவி
இருபத்தி எட்டு
நொடியில் இருனூற்றுப்
பதிமூன்று இலக்கப்,
பெருக்கலைச் செய்து
சாதனை படைத்தார்.
ரொனால்ட் ரீகன்
வெற்றி பெற்றிட
விவி கிரியோ
பரமபதம் அடைந்தார்.
நெவாதா சோதனை
தளத்திலே என்றும்
ஆங்கிலம் பேசுவோர்
அணுசோதனை நடத்தினர்.
பாப்பு அரசரோ
முதன் முறையாக
ஆப்பிரிக்க தேசம்
சுற்றிடச் சென்றார்.
பீட்டில் பாடகர்
பால் மெக்கார்டினி
கொலையுண்டிறக்க
உலகமே அழுதது.
ஜூன் மாதத்தில்
பதினாறாம் நாளில்
ஜூலியஸ் என்னும்
நல்லொரு இளைஞன்
ஜெசிந்தா என்னும்
”குமரி”ப் பெண்ணை
ஜெயமே காதல்
எனக் கைப்பிடித்தான்.
அவளது கையைப்
பிடித்த அக்கணமுதல்
எவளது அழகும்
அவன் பார்ப்பதில்லை
அவளும் அப்படி
கணவன் தன்னை
கவனம் கொண்டு
காத்து வருகிறாள்.
இத்தனை நேரம்
உலக செய்திகள்
முத்து முத்தாக
சொன்ன அவனுக்கு
சொத்தென தனக்கு
மனைவி வந்ததால்
அத்தனை செய்தியும்
சொத்தை ஆயின..