நண்பா(குமார் பாலகிருஷ்ணன்)

நம் உலகம்
தாவணிக்கு
லாவணி பாடுவதோ
சுடிதாருக்குச்
சுகந்தம் பாடுவதோ
இல்லை

திராவக தீபங்கள் நாம் !
தண்ணீர் பட்டாலும்
ஆக்ஸிஜன் எடுத்து
எரிவோம் . . .

வெந்து கருக
இலையல்ல நாம்
வேர்கள்
மீண்டும் விழுதாவோம்
சரிசெய்து கொள்ளவே
அடிக்கடி நாம்
பழுதாவோம் . . .

மிதிவண்டிகள்
மிதிபட்டால் மட்டுமே
மதிக்கப்படும்

நம்மை மிதிப்பவர்கள்
மிதிக்கட்டும்

வெட்டப்படும்
முடிகள் மட்டுமே
இரட்டிப்பு வேகத்தோடு
வளரத் தயாராகும் . . .

குட்டப்படும்
அகங்கள் மட்டுமே
குறித்த இலக்கை
நோக்கிப்
பயணிக்கும்

குட்டுபவர்கள் குட்டட்டும் . . .

புரிந்து மகிழும்
மொழியல்ல நாம்
கேட்டால் இனிக்கும்
இசைதான் நாம்.

கருவேல முள்குத்தித்
துவண்டு போவதல்ல
வாழ்கை
கடிகார
முள்துரத்தி
வெற்றி
காண்பது தான்
வாழ்க்கை

நடந்தால்
நசுங்கும்
நாணல்கள்
நாங்களன்று
வானவில்லின்
கோணல்கள்
நாங்களென்று
உலகிற்கு
உரக்கச்சொல்வோம் . . .

வயதான பூமி
மாசடைந்த காற்று
ஓட்டையான ஓசோன்
இவையெல்லாம்
தூக்கி யெறி

வா நண்பா
புது உலகம்
நாம் சமைப்போம் . . .
கொண்டாட்ட கீதம்
நிலவில் எடுப்போம் . . .

எழுதியவர் : kumaresan (7-Jun-13, 8:16 pm)
பார்வை : 171

மேலே