அவதாரக் காற்றே9B2

சுவாசம் தந்து எனக்கு
தாய் ஆகிறாய்

பாசம் கொண்டு அணைத்து
தந்தை ஆகிறாய்

நேசம் கொண்டு எனைத் தொடர்ந்து
தோழன் ஆகிறாய்

வாசம் கொண்டு என்னிடமே
காவலன் ஆனாய்

வேசம் இட்டு உள்ளம் கொள்ள
காதலன் ஆனாய்

விசுவாசம் வைத்து என்றுமே
அடிமையும் ஆனாய்

பரிகாசம் செய்து எனக்கே
விமர்சகன் ஆனாய்

கோசம் இட்டுக் கொள்கை பரப்ப என்
தொண்டனும் ஆனாய்

துவேசம் கொண்டு எனை விலகி
துரோகியும் ஆனாய்

ஆவேசம் கொண்டு அச்சுறுத்தி
அந்நியம் ஆனாய்

பத்து அவதாரம் எடுத்த பத்மநாபனோ
சித்து விளையாட்டு செய்யும் சித்தாந்தனோ
பித்துபிடித்து சித்தம்சிதறி சிதைந்திடாது
யுத்தமின்றி என்னிடமே சித்தமாயிடு

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை அமுதா (7-Jun-13, 9:26 pm)
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே