என் காத்திருப்பு

ஐந்து வயதில் காத்திருந்தேன்
பள்ளிகூடத்தில்
பள்ளி எப்போது விடும் என்று
பத்து வயதில் காத்திருந்தேன்
மரத்தடி நிழலில்
நண்பர்கள் விளையாட
வருவார்களே என்று
பதினைந்து வயதில் காத்திருந்தேன்
என் வீட்டில்
பரிட்சை எழுதிவிட்டு
பதினெட்டு வயது முதல்
காத்திருக்கிறேன்
பெண்ணே உன் காதலுக்காக