கோபத்தைக் குறைக்க நாம் செய்ய வேண்டியவை
வெளியிடம் எனின் உமது கவனத்தை வேறு இடங்களில் திருப்புவதன் மூலமோ ஆழ்ந்த பெருமூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதன் மூலமோ கோபத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
வீடெனின் உமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கலாம் அல்லது படுக்கை அறைக் கதவை தாளிட்டுக் கொண்டு தலையணை மொத்து மொத்து என மொத்தினால் வாயில்லாப் பிராணிகள் நம்மை எதிர்க்காது. இச்செயல் நம் மனதை அமைதிப்படுத்திவிடும்.
தினமும் மூச்சுப் பயிற்சியை முறையாக 5 நிமிடம் செய்வதன் மூலம் முழுமையாகக் கோப உணர்வினை தலை தூக்காமல் இருக்கச் செய்யலாம்.
முதலில் வலது நாசியை கட்டைவிரலால் மூடிக்கொண்டு இடது நாசி வழியே மெல்ல முடிந்தவரை காற்றை உள்ளிழுத்து சில நொடிகள் நிறுத்தி, பின்னர் இடது நாசியை மோதிர விரலால் மூடிக் கொண்டு காற்றை வலது நாசி வழியே வெளிவிட வேண்டும். பின்னர் இடது நாசியை மோதிர விரலால் அழுத்தி மூடிக்கொண்டு வலது நாசி வழியே மெல்ல முடிந்தவரை காற்றை உள்ளிழுத்து, பின்னர் சில நொடிகள் நிறுத்தி காற்றை இடது நாசி வழியே மெதுவாக வெளிவிட வேண்டும்.
அனைத்தையும் விடச் சாலச் சிறந்தது மௌனம்! மௌனமாக அச்சூழidலில் இருந்து விலகிச் செல்வது உசிதமானது.! நம் நரம்பு மண்டலமும் மனமும் பாதுகாக்கப்படும்.. அவை பாதிக்கப்பட்டால் நம் உடல்நலம் சீர்கெடும். மௌனமாக விலகிச் செல்வது, வீடாயினும் வெளியிடமாயினும் கடைப்பிடிக்க இயலும் அறிய உபாயம்!
வாழ்க நலமுடனும் வளமுடனும் !!
முனைவர்.வெ.வசந்தா.
இது குறித்து தங்கள் விலைமதிப்பற்றக் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.